என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பிரித்வி ஷா
நீங்கள் தேடியது "பிரித்வி ஷா"
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 99 ரன்னில் ஆட்டமிழந்து சதத்தை தவறவிட்டார் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீரர் பிரித்வி ஷா. #IPL2019 #DDvKKR
டெல்லி டேர்டெவில்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான 10-வது லீக் ஆட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. முதலில் விளையாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்தது.
பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரராக களம் இறங்கிய இளம் வீரரான பிரித்வி ஷா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 54 பந்தில் 99 ரன்கள் எடுத்திருந்தார். 55-வது பந்தில் சதம் அடிப்பார் என்று எதிர்பாத்த நிலையில் பெர்குசன் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் அவரது மெய்டன் சதம் கனவு வீணாகியது. ஐபிஎல் வரலாற்றில் இதற்று முன் விராட் கோலி டெல்லி அணிக்கு எதிராகவும், ரெய்னா சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராகவும் 99 ரன்களில் ஆட்டமிழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளனர். தற்போது பிரித்வி ஷா அந்த சோகமான சாதனையும் இணைந்துள்ளார்.

பயிற்சி ஆட்டத்தின்போது காயம் அடைந்த பிரித்வி ஷா ஆஸ்திரேலியா தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அழைக்கப்பட்டுள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதற்கு முன் இந்தியா பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. இந்த பயிற்சி ஆட்டத்தில் அரைசதம் விளாசிய இளம் வீரரான பிரித்வி ஷா, பீல்டிங் செய்யும்போது தவறி கீழே விழுந்தார். அப்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது.
இதனால் அடிலெய்டு மற்றும் பெர்த் டெஸ்டில் இடம்பெறவில்லை. வரும் 26-ந்தேதி தொடங்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்ட் ஆன மெல்போர்ன் டெஸ்டில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இருந்து பிரித்வி ஷா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். இவர் விரைவில் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் திணறி வரும் நிலையில் இரண்டு பேரில் ஒருவருக்குப் பதிலாக மயாங்க் அகர்வால் ஆடும் லெவன் அணியில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. 3வது டெஸ்டில் விளையாடுவதற்கு வாய்ப்பு உள்ளது. #PrithviShaw #AUSvIND
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி நடந்து வருகிறது.
பயிற்சி கிரிக்கெட்டில் பீல்டிங்கின் போது இடது கணுக்காலில் காயமடைந்த இந்திய இளம் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா முதலாவது டெஸ்டில் விளையாடவில்லை.
அவரது காயத்தன்மை குறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறுகையில், ‘பிரித்வி ஷா காயத்தில் இருந்து வேகமாக குணமடைந்து வருகிறார். இப்போது நடக்கிறார். இந்த வார இறுதிக்குள் ஓட ஆரம்பித்து விட்டால், அது நல்ல அறிகுறியாக இருக்கும்.
2-வது டெஸ்டுக்கு முன்பாக அவரது காயம் எந்த அளவுக்கு குணமடைந்துள்ளது என்பதை பார்த்து அணியில் சேர்ப்பது குறித்து முடிவு செய்வோம்’ என்றார். 19 வயதான பிரித்வி ஷா மெல்போர்னில் 26-ந்தேதி தொடங்கும் 3-வது டெஸ்டில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளது. #PrithviShaw #AUSvIND

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக சதம் விளாசியதால் முரளி விஜய் அடிலெய்டு டெஸ்டில் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. #AUSvIND
இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கி விளையாடி வந்தவர் முரளி விஜய். தென்ஆப்பிரிக்கா தொடரிலும், இங்கிலாந்து தொடரிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்தியாவில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் அவர் இடம்பெறவில்லை.
அதேவேளையில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடினார். கவுன்ட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிவில் விளையாடும் இந்திய அணியில் இடம்பிடித்தார்.
அடிலெய்டில் முதல் டெஸ்ட் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா மோதிய, இந்த ஆட்டம் நவம்பர் 28-ந்தேதி முதல் டிசம்பர் 1-ந்தேதி (நேற்று) வரை நடைபெற்றது.
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறங்கிய பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல் ஆகியோரைத்தான் இந்திய அணி நிர்வாகம் தொடக்க வீரர்களாக களம் இறக்க முடிவு செய்தது. இதனால் முதல் இன்னிங்சில் முரளி விஜய்க்கு பேட்டிங் வாய்ப்பு கிடைக்கவில்லை. பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் சேர்த்தார். லோகேஷ் ராகுல் 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா பீல்டிங் செய்யும்போது பிரித்வி ஷாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் 2-வது இன்னிங்சில் லோகேஷ் ராகுல் உடன் முரளி விஜய் தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கினார். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லோகேஷ் ராகுல் 62 ரன்கள் சேர்த்தார். முரளி விஜய் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 132 பந்தில் 129 ரன்கள் குவித்தார்.
காயம் அடைந்த பிரித்வி ஷா முதல் டெஸ்டில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முரளி விஜயா? அல்லது ரோகித் சர்மாவா? என்ற கேள்வி எழுந்து வந்தது. இந்நிலையில் 2-வது இன்னிங்ஸ் சதத்தால் முரளி விஜய் தொடக்க பேட்ஸ்மேனாக விளையாட அதிக வாய்ப்புள்ளது.

பயிற்சி ஆட்டத்தில் கேட்ச் பிடிக்கும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டதால் பிரித்வி ஷா அடிலெய்டு டெஸ்டில் இருந்து விலகியுள்ளார். #Prithvishaw
சிட்னி:
விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டித் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. அடுத்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது.
டெஸ்ட் போட்டிக்கு முன்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய லெவனுடன், இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.
இந்த பயிற்சி ஆட்டம் நேற்றுமுன்தினத்தில் இருந்து சிட்னியில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருந்தபோது, இந்திய அணியின் இளம் வீரர் பிரித்வி ஷா டீப் மிட்விக்கெட் திசையில் பவுண்டரி லைன் அருகில் ஜம்ப் செய்து கேட்ச் பிடிக்க துள்ளிய அவர், காலை கீழே வைக்கும்போது தடுமாறினார். இதனால் கணுக்காலில் காயம் அடைந்து வலியால் துடித்தார்.
இதையடுத்து, உடனடியாக மருத்துவ குழுவினரின் உதவியுடன் மைதானத்தை விட்டு பிரித்வி ஷா வெளியேறினார். அவரது காயம் குறித்து அறிய ஸ்கேன் செய்யப்பட இருக்கிறது. காயத்தில் இருந்து விரைவாக மீண்டுவதற்கான சிகிச்சையை மருத்துக்குழு மேற்கொண்டு வருகிறது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான நான்கு டெஸ்டிலும் இந்த இருவர்களையும்தான் தொடக்க வீரர்களாக களம் இறக்க வேண்டும் என்று சேவாக் தெரிவித்துள்ளார். #AUSvIND
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ந்தேதி தொடங்குகிறது. இந்த முறை ஆஸ்திரேலியா மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை கைப்பற்றவில்லை எனில், இதற்குப்பிறகு வாய்ப்பே கிடைக்காது என்று கூறப்படுகிறது.
இந்திய அணியில் லோகேஷ் ராகுல், பிரித்வி ஷா மற்றும் முரளி விஜய் ஆகிய தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இவர்களில் இருவருக்குத்தான் ஆடும் லெவனில் இடம் கிடைக்கும். இந்நிலையில் லோகேஷ் ராகுல் மற்றும் பிரித்வி ஷா ஆகியோரைத்தான் தொடர் முழுவதும் தொடக்க பேட்ஸ்மேன்களாக களம் இறக்க வேண்டும்என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘நான் கேப்டனாக இருந்தால் கேஎல் ராகுல் மற்றும பிரித்வி ஷா ஆகியோருக்கு தொடர் முழுவதும் தொடக்க வீரர்களாக களம் இறங்க வாய்ப்பு கொடுப்பேன். ஏனென்றால், முரளி விஜய் போதுமான அளவு வாய்ப்பு பெற்றுவிட்டார். தற்போது அவர் மீண்டும் வாய்ப்பு பெற காத்திருக்க வேண்டும்.
பிரித்வி ஷா அவரது திறமையை நிரூபித்திருக்கிறார். அறிமுக டெஸ்டில் சதமும், அடுத்த போட்டியில் 60 ரன்களுக்கு மேலும் அடித்துள்ளார். அதனால் அவருக்கு எதிர்காலம் இருக்கிறது. அவரால் அடுத்த 10 முதல் 12 வருடங்கள் வரை விளையாட முடியும். அதனால் அவருக்கு தொடர் முழுவதும் வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். ஆஸ்திரேலியா தொடரில் முரளி விஜய் களம் இறங்குவார் என்று நான் பார்க்கவில்லை’’ என்றார்.

சிட்னி மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்களுக்கு இளம் வீரரான பிரித்வி ஷா சளைக்காமல் செல்பிக்கு போஸ் கொடுத்தார். #AUSvIND #Prithvishaw
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. இந்திய அணி தற்போது சிட்னியில் நடைபெற்று வரும் நான் நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இந்த ஆட்டம் நேற்று தொடங்கியது. இந்திய டெஸ்ட் அணியில் இளம் வீரரான பிரித்வி ஷா அணியில் இடம்பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான இவர், முதல் இன்னிங்சிலேயே சதம் அடித்து அசத்தினார். இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள இவருக்கு, ஆஸ்திரேலியாவில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
சிட்னியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவருடன் ஏராளமான ரசிகர்கள் செல்பி எடுக்க விரும்பினார். அவரும் சளைக்காமல் ரசிகர்களுக்கு போஸ் கொடுத்தார். பயிற்சி போட்டியின் நேற்றைய ஆட்டம் மழையா் தடைபட்டது. இன்றைய 2-வது நாள் ஆட்டத்தில் பிரித்வி ஷா சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார்.

Young @PrithviShaw already managing to grab eyeballs here in Australia. Fans throng at The SCG for a selfie and autograph from the rising Star of #TeamIndia 🌟😎👌🏻🤙🏻 pic.twitter.com/EvYwGgEMTU
— BCCI (@BCCI) November 29, 2018
ஆஸ்திரேலிய லெவனுடனான 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியின் கோலி, பிரித்வி ஷா, புஜாரா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினர். #AUSvIND #ViratKohli
சிட்னி:
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடிந்தது.
4 டெஸ்ட் கொண்ட தொடர் வருகிற 6-ந்தேதி அடிலெய்டுவில் தொடங்குகிறது. டெஸ்ட் தொடருக்கு முன்பு ஆஸ்திரேலிய லெவனுடன் இந்திய அணி 4 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது.
அதன்படி நேற்று சிட்னியில் தொடங்க இருந்த பயிற்சி ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஆஸ்திரேலிய லெவன் ‘டாஸ்’ வென்று இந்திய அணியை முதலில் விளையாட அழைத்தது. பிரித்வி ஷாவும், லோகேஷ் ராகுலும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். ராகுல் 3 ரன்னிலேயே வெளியேறினார்.
அடுத்து புஜாரா களம் வந்தார். இருவரும் ஆஸ்திரேலிய லெவன் பந்து வீச்சை விளாசி தள்ளினர். பிரித்வி ஷா 69 பந்தில் 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும்.
கேப்டன் விராட்கோலி 4-வது வீரராக ஆடினார். அவரும், புஜாராவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் எடுத்தனர்.
புஜாரா 89 பந்தில் 54 ரன்னும் (6 பவுண்டரி), விராட்கோலி 87 பந்தில் 64 ரன்னும் (7பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்திய அணி 204 ரன்னில் 4 விக்கெட்டை இழந்தது. 5-வது விக்கெட்டுக்கு ரகானே- விகாரி ஜோடியும் சிறப்பாக ஆடியது.
ரகானே 56 ரன் எடுத்து ரிட்டயர்ட் அவுட்டானர். விகாரி 53 ரன்னும், ரோகித்சர்மா 40 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி 92 ஓவரில் 358 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. அதன்பின் ஆஸ்திரேலிய லெவன் முதல் இன்னிங்சை விளையாடியது. #AUSvIND #ViratKohli

இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்டிற்கு பயிற்சி கொடுப்பதற்காக சிட்னி செல்கிறார். #AUSvIND
இந்திய அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. நாளை டி20 தொடர் தொடங்குகிறது. அதன்பின் டெஸ்ட் போட்டி டிசம்பர் 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. 2-வது போட்டி 14-ந்தேதி பெர்த்திலும், 3-வது ஆட்டம் மெல்போர்னில் 26-ந்தேதியும், 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் சிட்னியில் ஜனவரி 3-ந்தேதியும் நடக்கிறது.
டி20 அணியில் இடம்பெறாத டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடினார்கள். இவர்கள் தற்போது சிட்னி வந்துள்ளனர். டி20 போட்டி நாளை தொடங்கினாலும், டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டும் என்பதற்காக அவர்கள் ஐந்து நாட்கள் வலைப்பயிற்சியில் ஈடுபட இருக்கிறார்கள்.
அவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சஞ்சய் பாங்கர் சிட்னி செல்கிறார். பிரித்வி ஷா, ஹனுமா விஹாரி போன்றோருக்கு பாங்கர் பயிற்சி அளிக்க இருக்கிறார்.

நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், விஹாரி, பார்தீவ் பட்டேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.
இந்தியா ‘ஏ’ அணி நியூசிலாந்து சென்றுள்ளது. நியூசிலாந்து ‘ஏ’ அணிக்கெதிராக நான்கு நாட்கள் கொண்ட மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் இன்று தொடங்கியது.
இந்தியா ‘ஏ’ அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. பிரித்வி ஷா, முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிரித்வி ஷா 62 ரன்களும், முரளி விஜய் 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அதன்பின் வந்த மயாங்க் அகர்வால் சிறப்பாக விளையாடி 65 ரன்களும், ஹனுமா விஹாரி 86 ரன்கள் குவித்தனர். கேப்டன் ரகானே 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். விக்கெட் கீப்பர் பட்டேல் சிறப்பாக விளையாடி 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். இந்தியா ‘ஏ’ அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 340 ரன்கள் குவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவனில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார். #AUSvIND
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. டி20 தொடர் முடிந்த உடன் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. ஆஸ்திரேலியா அணியில் முன்னணி பேட்ஸ்மேன்களான ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் ஓராண்டு தடையால் பங்கேற்க இயலாது. இதனால் இந்திய அணிக்கு அதிக அளவில் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியா தொடரில் ரோகித் சர்மாவிற்கு ஆடும் லெவன் அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சேவாக் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து சேவாக் கூறுகையில் ‘‘பிரித்வி ஷா மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்க வேண்டும். ஏனென்றால் ஆஸ்திரேலியாவில் எந்தவொரு அதிரடி பேட்ஸ்மேனாக இருந்தாலும் ரன்கள் குவிக்கலாம். அதன்மூலம் அணி வெற்றியை ருசிக்கும்.
ரோகித் சர்மா கட்டாயம் ஆடும் லெவன் அணியில் இடம்பெற வேண்டும். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் அடித்தவர் டெஸ்ட் போட்டியில் இடம்பெறாமல் வெளியே இருக்கக்கூடாது. இந்த கருத்தை நான் நீண்ட காலமாக தெரிவித்து வருகிறேன்’’ என்றார்.

இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன பிரித்வி ஷா காயத்தால் அவதிப்படுவதால் ரஞ்சி டிராபிக்கான மும்பை அணியில் இடம் கிடைக்கவில்லை. #PrithviShaw
மும்பையைச் சேர்ந்த இளம் வீரர் பிரித்வி ஷா. தொடக்க பேட்ஸ்மேன் ஆன இவர் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் அறிமுகம் ஆனார். முதல் டெஸ்டிலேயே சதம் அடித்து அசத்தியதோடு தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
இந்தியாவின் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் விளையாடினார். அப்போது முழங்கையில் காயம் ஏற்பட்டது. வருகின்ற நவம்பர் 1-ந்தேதி ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் பிரித்வி ஷாவிற்கு இடம் கிடைக்கவில்லை. காயம் குணமடைந்து உடற்தகுதி பெற்றால் ரஞ்சி டிராபியில் விளையாடுவார் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் பிரித்வி ஷா ரஞ்சி டிராபியில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது. நவம்பர் மாதம் இந்திய அணி ஆஸ்திரேலியா சென்று விளையாட இருக்கிறது. இந்த தொடரில் பிரித்வி ஷாவிற்கு இடமுண்டு. இந்நிலையில் இந்த காயம் அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷ்ரேயாஸ் அய்யர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரஞ்சி டிராபி தொடருக்கான மும்பை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ஷ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), 2. தவால் குல்கர்னி (துணைக் கேப்டன்), 3. சித்தேஷ் லாட், 4. ஜெய் பிஸ்ட்டா, 5. சுர்ய குமார் யாதவ், 6. குமார் யாதவ், 7. அஷாய் சர்தேசாய், 8. ஆதித்யா டரே, 9. ஏக்நாத் கெர்கார், 10. ஷவம் டுபே, 11. ஆகாஷ் பர்கர், 12. கர்ஷ் கோதாரி, 13. ஷாம்ஸ் முலானி, 14. அகில் ஹெர்வாத்கர், 15. துஷ்கர் தேஸ்பாண்டே, 16. ராய்ஸ்டன் தியாஸ்.

×

X